Today’s Youth Tomorrow’s Leaders | Best Essay 2021

Today’s Youth Tomorrow’s Leaders

 

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்

 

sssf

 

 
 
  சிறுவர்களின் உள்ளம் தூய்மையானது; தெளிவானது; மாசுமறுவற்ற அவர்களிடம் ஆற்றல்கள் நிறைய உள்ளன. அவை உள்ளார்ந்த நிலையில் உறங்கிக் கிடக்கின்றன. அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், ஆசாபாசங்களும் அவர்கள் எண்ணங்களுக்கும், சிந்திக்கும் ஆற்றல் களுக்கும் எல்லை வகுக்கின்றன. எண்ணங்கள் மிகவும் வலிமை படைத்தவை. எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமானது மனம் மனதில் வலிமையை வளர்த்துக்கொண்டால், எந்தக் காரியத்தையும் சுலபமாகச் சாதித்துக்கொள்ள முடியும். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். ஆதலால் அவர்கள் தமது தனித் தன்மையை சிறப்பானதாக வளர்த்து தமக்கும் சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் நற்பழக்க வழக்கங்களை உடையவராய் நாளைய தலைவர்களாக உருவாக முடியும் என்பதில் ஐயமில்லை.

 

       தனி மனிதனே சமுதாயம்,ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” எனவே அன்பு, பணிவு, பெரியோரை மதித்தல், சுய நம்பிக்கை ஆகிய நற்பழக்க வழக்கங்களைப் பெற்று வளமான வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய மனப் பயிற்சி சிறுவயதிலேயே வழங்கப்படல் வேண்டும். நற்பழக்க வழக்கங்களை உருவாக்குவதில் குடும்பங்கள், பாடசாலைகள், சமயநிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” அதாவது பிள்ளையின் ஆரம்பப் பருவம் வீட்டில் இருந்தே தொடங்குகின்றது. எனவே பெற்றோர், குடும்ப அங்கத்தினர் ஆகியோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டல் வேண்டும்.

  எண்ணம் என்பது ஒரு சிறிய விதை, விதை தானாக முளைக்காது முளைப்பதற்கு வேண்டிய சூழ்நிலை அவசியம், அதனை உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பு, ஆக்க பூர்வமான பக்கங்களைக் கண்டறிந்து, ஆற்றுப்படுத்த வேண்டும் அதற்கு சரியான வழிகாட்டல் அவசியம் பிள்ளைகளிடமுள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வளர்த்து அவர்களின் பண்பு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை நடைமுறைப்பெறுமதி உடையவராக்குவது பெற்றோரின் கடமை. சமூகப் பொறுப்புணர்ச்சியோடு வளர நாட்டையும், நானிலத்தையும் வாழ்விக்கும் ஆற்றல் பெற விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு வளர்த்தெடுக்கப் படல் வேண்டும், குடும்பம், குற்றம் ஊர், நாடு, உலகம், என விரிந்து பரந்த சமுதாய உணர்வு தோற்றம் பெற நெறிப்படுத்தல் வேண்டும். அன்பு, உண்மை, நேர்மை முதலிய நல்லொழுக்கப் பண்புகள் வளரும் பருவத்தில் பிள்ளைகளிடத்து பொறுப்புக்களை வழங்கித் திறமையாகச் செயற்பட வேண்டிய வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்கப்படுமிடத்து இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக உருமாற முடியும் என்பதில் ஐயமில்லை “வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்” வளரும் பருவமே நல்லொழுக்க பண்புகள் வித்திடப்பட வேண்டிய பருவமாகும்.

  சிறுவர்களின் வளரும் பருவத்தில் மிக முக்கியமான காலப்பகுதி பாடசாலைகளின் தொடர்புபடுத்தப்படுகின்றது. எனவே பாடசாலைகள் வெறும், அறிவு பெருக்கம் அறிவு ஆற்றல் விருத்தி என்பவற்றில் மட்டும் கவனம் செலுத்தாது மனிதப் பண்பாட்டு, விழுமியம், போன்ற நற்பண்புகளை விருத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் பல நற்பணி புகள் உருவாகத் துணை புரிகின்றன. கூட்டு மனப்பான்மை ஒற்றுமை, குழுச்செயற்பாடு, ஆகிய நற்பண்புகளை வளர்க்க உதவுகின்றன பாடசாலை களிடையே மேற்கூறிய செயற்பாடுகள் இடம் பெற வழிகாட்டுகின்றன. அத்துடன் தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய சமூகம் சார்ந்த மனப்பாங்குகளையும் வளர்த்தெடுக்கின்றன. பாடசாலையில் இடம் பெறுகின்ற, சட்ட திட்டங்கள் நேரசூசிகள் ஆகியன உடல், உள விருத்திப் பயிற்சிகளை வழங்குகின்றன சமூகப் பொறுப்புணர்ச்சியோடு வளர்ந்து பிரச்சினைகளைச் சந்திப்பதிலும், திரட்பதிலும் சரியான அணுகுமுறைகளைக் கையாள இப்பண்புகளே வித்திடுகின்றன. சிறு வயதில் ஏற்படும் அனுபவங்கள், நிகழ்ச்சிகளும் தான் அவர்களது எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும். ஏனெனில் ஒரு கரு உருவான காலத்திலிருந்து ஏற்படும். எந்த ஒரு அநபவமும் அவரை விட்டு சுலபமாக நீங்கி விடுவதில்லை . அவர்களது உடல்இயக்கமே அவர்களுக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன் தன் வேலையைக் காலக் கணக்குப்படி செய்வதும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஒத்துழைப்பதும் விந்தையான ஒரு நிகழ்வு. இந் நிகழ்வுகள் ஒரு முன் உதாரணமாக இருப்பதை சிறுவர்கள் புரிந்து கொள்ள உதவ வேண்டும்.

         சிறுவர்கள் இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவர்களை நெறிப்படுத்துவதில் சமய நிறுவனங்களுக்கும் பெரும் பங்குண்டு. உலகத் தோற்றம் எதிர்கால சந்ததி, நாம் வாழும் உலகம் பற்றிய மதிப்பீடுகள் பற்றித் தெளிவாகவும் திட்டமாகவும் வரையறை செய்யும் ஆற்றல் சமய நிறுவனங்களுக்கு உண்டு. சமய வாழ்வு வாழ அதன் மூலம் அவர்களது சமுதாயப் பண்புகள் மலர வித்திடப்படலாம். ஜீவகாருண்யம் மனித வாழ்விற்கு இன்றியமையாத. சமுதாயத்திற்கு உதவுதல், ஆன்மீக உணர்வை வளம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நல்லதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தைக் உருவாக்கும் சமுதாயச் சிற்பிகள். அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிவகைகளை சீர்தூக்கி அறிதல் வேண்டும். மனோதத்துவ ரீதியில் அணுகல், தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துதல், ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களையும், தமது செயல்களின் விளைவுகளையும் உணர்ந்து அனுபவிக்கும் திறனையும் வளர்த்தெடுக்க வேண்டும். எனவே சமநிலை நோக்கு கொண்ட ஒருவனாக உருவாக்கப்படல் வேண்டும். அதற்கு புரிந்து கொள்ளல், திட்டமிடல், தெளிவு ஆகியவை இன்றியமையாதவையாகும். இதன் மூலம் சொந்த வாழ்க்கையில் பொறுப்பேற்று நடப்பதோடு ஒருவன் சமுதாய வாழ்க்கைக்கும் பொறுப்புள்ளவனாக தன்னை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

        பண்டைக்காலத்தில் மக்கள் கூடி வாழ்ந்தனர். தேவைகள் குறைவு, தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொண்டனர். எனவே சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை. இன்று தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை. தமது தேவைகளைத் தானே பூர்த்தி செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. சார்ந்து வாழ வேண்டிய சூழல், ஆகவே பிறரோடு சகஜமாகப் பழகுதல், ஒத்து வாழுதல், விட்டுக்கொடுத்தல், சவால்களைச் சந்தித்தல், ஆகிய நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்தெடுத்தல் வேண்டும். ஆரோக்கியமான கண்ணோட்டத்தைப் பெற்று மனிதப் பண்பாடுகளையும் விழுமியங்களையும் வளர்த்து நல்ல தலைவர்களாக திறமையாகவும், செம்மையாகவும் செயல் புரிந்து வாழ்வில் வெற்றி பெற சமய நிறுவனங்களும் பெருந்துணை புரிகின்றன.

   “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” மனித மேம்பாடு அவனது செயல்களைப் பொறுத்தது. எனவே இன்றைய சிறுவர்கள் நாளைய பெருந்தலைவர்களாக மகத்தான சாதனைகளைச் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக நல்லதொரு சமுதாயத்தின் வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாக உருமாற்ற வேண்டியது. சமூகத்தின் கடமையாகும். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார் எனவே நல்லதோர் சமுதாயம் உருவாக ஆணிவேராக இருக்கின்ற சிறுவர்கள் சரியான முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் ஆவர்…!!!

 

  ( Tamil Essay Today’s Children’s are tomorrow’s leaders)

 

 

Master Degree
Follow us on Facebook

Other Exam Papers Download

01. GCE A/L General English Past Papers | In English Medium Click here to Download

02. Grade 5 scholarship exam Excellent English Click here to Download

03. Grade – 5 IQ Model Paper Click Here to Download