Kids in dangerous cellular World 2021

ஆபத்தான கைப்பேசி உலகத்தில் சிறுவர்கள்…! கட்டுரை

dangerous cellular World

 ஆபத்தான கைப்பேசி உலகத்தில் சிறுவர்கள்…!

 
Mobile%2BChild

 

 

கவல் தொடர்பாடல் சாதனம் எனப்படுவது ஒரு கருத்தை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு பரிமாற்றம் செய்யும் முறை யாகும். அந்த வரிசையில், உலகையே உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் ஒரு சாதனமாக கையடக்கத் தொலைப்பேசி காணப்படுகிறது.

தொலைப்பேசி, சமூகத்திலுள்ள அனைத்து நபர்களிடமும் செல்வாக்கு செலுத்தும் அதேவேளை, மாணவ சமூகத்தினரிடமும் பாரிய மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது.

இன்றைய மாணவர்கள் தங்களதுகற்றல் செயற்பாடுகளையும் மறந்து, தொலைபேசியின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இரையாகின்றனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாத அளவுக்கு மாணவர்கள் தொலைப்பேசியோடு ஒன்றித்து காணப்படுகின்றனர்.

தங்களை சுற்றி நடப்பவை பற்றி எவ்வித சிந்தனையும், கரிசனையும் இன்றி வீணான விளையாட்டுக்கள், சமூக வலைத்தள பாவனை என நேரத்தை விரயம் செய்கின்றனர். தொலைப்பேசி விளையாட்டுக்கள் மீதான இவர்களின் ஈடுபாடானது உணவு, உறக்கம் என்பவற்றையே மறக்கடிப்பதோடு, சில நேரங்களில் பாடசாலைகளுக்கு கூட செல்லாமல் தடுத்துவிடுகிறது.

கடந்த வருடங்களில் “Blue whale” எனப்படும் வீடியோ கேம், முழு உலகையும் உலுக்கிய சம்பவங்களை நாம் அறிவோம் அதுபோக, அண்மைக்காலமாக Pubg , Free fire முதலான கேம்கள் மாணவ சமூகத்தை கடந்து, நம் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

அண்மையில், அயல்நாடான இந்தியாவில் ஒரு சம்பவம் பதிவாகியது. பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது சிறுவன் Pubg இல் மூழ்கியுள்ளான். அதன்கட்டளைகளுக்கிணங்க, கட்டணங்களை செலுத்துவதற்காகவும், அதனோடு தொடர்புடைய ஏனைய செயற்பாடுகளுக்காகவும் பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தியுள்ளான். தன் தாயின் தொலைப்பேசியில் விளையடிய அச்சிறுவனுக்கு அத்தொலைப் பேசியில் உள்ள வங்கியின் அப்ளிக்கேஷன் ஊடாக பணத்தை செலுத்த இலகுவாயிருந்திருக்கிறது. அதுமட்டு மல்லாது, அவ்வப்போது வரும் பணம் பரிமாற்ற குறுஞ்செய்திகளையும் அழித்துவிட்டு பெற்றோரை ஏமாற்றி வந்திருக்கிறான். பெற்றோரும் கொரோனா காலத்தில் மகன் ஒன்லைன் வகுப்புகளை பயன்படுத்துகிறான்என நம்பி ஏமாந்து உள்ளனர் இப்படியாக தந்தையின் மருத்துவ செலவுக்கான பணம், தாயின் சேமிப்பு என 16லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பின்படி) பணத்தை Pubg ல் கரைத்திருக்கிறான் அச்சிறுவன். 

இந்த செய்தியினூடாக தெரியவருவது என்னவெனில், அச்சிறுவன் Pubg இல் எவ்வளவு அடிமையாகி இருந்திருக்கிறான் என்பது இப்படியாக, கைப்பேசியில் விளையாடுபவர்கள் உடற்பயிற்சி என்ற விடயத்தை மறந்துவிடுகின்றனர். இது உடல்சார் நோய்களை தோற்றுவிப்பது டன் உற்சாகமாக செயற்படுவதையும் குறைத்துவிடுகின்றது. இதனாலேயே இன்றைய சமூகத்தினர் 40 வயதை யேனும் தாண்டுவதற்கு முன், பல நோய்களுக்கு ஆளாகி, தங்களுடைய வாழ்நாளையே சுருக்கி விடுகின்றனர்.

மாணவர்களிடத்திலே சமூக வலைத்தள ( Social Media) பாவனையானது. கலாசார பண்பாட்டு சீர்கேடுகளையும் நடத்தை பிறழ்வுகளையும் ஏற்படுத்துகிறது.

முன் அறிமுகமில்லாதவர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி, நடத்தை பிறழ்வான செயற்பாடுகளை  செய்வதுடன், காதல் வயப்படல், பிறகு ஏமாற்றுதல், ஏமாற்ற மடைதல், ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தற்கொலை என்பவற்றுக்கு ஆளாகின்றனர். சிலர் பாடசாலைகளுக்குக் கூட தொலைப்பேசிகளை எடுத்துச் சென்று, ஏனைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

social media 2489595 640

 

 

இன்று, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வாட்ஸ் அப்பில் (Whatsapp) போடும் ஸ்டேட்டஸ்ஸினை (Status) யார்? யார்? பார்க்கிறார்கள்? பார்க்கவில்லை டிக் டொக்கில்  ( Tik Tok) போடும் வீடியோக்களை எத்தனை பேர் லைக் (Like) செய்கின்றார்கள்? முகப் புத்தகத்தில் (Facebook) தங்கள் புகைப்படத்துக்கு எத்தனை லைக்குகள் (Like) வருகின்றன , இன்ஸ்டாகிராமில் (Instagram) எத்தனை ஃபொலோவர்ஸ் (Followers) உள்ளனர் இப்படியான விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். இவை குறையும் பட்சத்தில் அவர்கள் யாரும் தன் மீது விருப்பம் காட்டுவதில்லை எனவும் தனிமையை உணர்வதாகவும், ஏனைய உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 மாணவர்கள் குறுஞ்செய்தி அனுப்புவது கூட, மொழி விருத்தியை தடை செய்துவிடுகிறது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள நேரம் கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லும் தன்மையை குறைத்து விடுகிறது கைப்பேசி பாவனையானது வாசிப்பு தேடல், எழுத்து என்பவற்றை மாணவர்கள் மறந்துவிடும் நிலைக்கு மாறியுள்ளது. இப்படியாக அறிவு விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் கைப்பேசி, சமூக நல்லுறவிலும் தாக்கத்தை செலுத்துகிறது.

கைப்பேசியினுள் மூழ்கியிருப்பதால் அருகிலுள்ள மனிதர்களையும் பாவனையாளர்கள் அறிவதில்லை. சமூகத்திலுள்ள நபர்களை பற்றிய எண்ணம் அற்றவர்களாக, தங்களது உலகையே ஒரு தொலைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டி இருக்கிறார்கள்.

அடுத்து மாணவர்களை ஆட்டிப் படைக்கும் ஒன்றே செல்பி (Selfie) மோகம் தாங்கள் எடுக்கும் செல்ஃபி (Selfie) புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் (Social Media) பதிவேற்றம் செய்ய ஆர்வம் காட்டும் இவர்கள், பிறரை விடவும் தம்மை வித்தியாசமாக காட்டிக் கொள்ளும் எண்ணத்தில், அச்சமூட்டும் இடங்களில் செல்ஃபி (Selfie) எடுத்து உயிரையே விடும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இப்படி பிறர் தங்களை விரும்பவேண்டும் என்பதற்காக தங்களது இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு, போலியான ஒரு வாழ்க்கையை மாணவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கைப்பேசி வாங்கிக் கொடுத்தால் மட்டுமே பாடசாலை செல்வேன், படிப்பேன் என பெற்றோர் களை மாணவர்கள் அச்சமூட்டும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் கைப்பேசிக்கான மீள்நிரப்பு அட்டைக்காக (Recharge Card) சொந்த வீட்டிலேயே பணத்தை திருடுமளவுக்கு மாணவர்கள் தாழ்ந்து விடுகின்றனர்.

இவ்வாறான நடத்தைப் போக்குடைய மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

 கைப்பேசி பாவனையை குறைத்துசமூகத்தவர்களால் செய்ய முயன்ற செயற்பாடுகளை செய்தல், இன்றைய மாணவர்களின் கற்றலுக்கான வழி காட்டலின் அவசியமாக உள்ளது.

 எனவே உலகமயமாக்கலின் தாக்கம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பல நன்மை களை புரிந்தாலும், அவற்றை தவறான முறைகளில் பயன்படுத்தும் தன்மை யையே அதிகமாக காணமுடிகிறது.

 பல மாணவர்களின் கற்றல் இடைவில கலுக்கு கைப்பேசி பாவனையும், அவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றது.

கைப்பேசி பாவனையில் உள்ள பாதகமான விளைவுகளை பற்றியவிழிப்புணர்வுகளை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டும். கற்றல் செயல் பாடுகளை எவ்வாறு ஆர்வமுடையதாக மாற்றலாம், எதிர்கால இலக்கு, நோக்கம் என்ன என்பன பற்றி விளக்கங்களையும்  மாணவர்களிடத்தில் தோற்றுவிக்க வேண்டியது  எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.

Grade 3 Maths
Follow us on Facebook

Download Exam Papers Below Links

01. Grade 5 Scholarship| Pulamai kadhir| Environment paper Click here to Download

02. Grade 5 scholarship past papers Tamil medium 2019 click here to Download

03. Grade 5 Scholarship 520 IQ Question with answer click here to Download