How To Improve Oxygen Levels In Prone Position Easy method – 1

How To Improve Oxygen Levels In Prone Position

வீட்டிலேயே ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் முறை

Follow Us on Facebook

Proning Position (வீட்டிலேயே ஆக்சிஜன் லெவல் அதிகரிக்கும் வழி முறை). பலரும் பயன்பெற அதிகம் பகிருங்கள்ப்ரோனிங் பற்றி அறியதவர்களுக்கு!!!

கோவிட் தொற்று உள்ளவர்கள், ஆக்சிஜன் லெவல் குறைவானவர்கள் வீட்டிலேயே படுக்கையில் சில பொசிசனில் படுப்பது மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கூட்டும் வழி முறை பெயர் தான் ” prone”

கோவிட் தொற்றால் வீட்டில் தன்னை தனிமை படுத்தி கொண்டு இருபவர்கள். மற்றும் போதிய ஆக்சிஜன் அளவு இல்லாதவர்கள்.. வீட்டிலேயே Oximeter இல் பரோசோதனை செய்து 94 சத ஆக்சிஜன் அளவுக்கு கீழ் உள்ளவர்கள் இதை செய்யலாம். சுகாதார துறையால் பரிந்துரைக்க பட்டது இது.பொதுவாக சுவாசத்தின் போது நமது நுரையீரலின் அனைத்து பாகமும் பயன் படுவது இல்லை. சில பகுதிகள் வேலை செய்யாமல் ரிசர்வ் இல் இருக்கும். வீட்டில் சில அறைகளை நாம் பயன்படுத்தாமல் வைத்து இருப்பது போல.

சில பொசிசனில் மாற்றி மாற்றி படுப்பது மூலம் நுரை ஈரலின் அனைத்து பாகங்களையும் சுவாசிக்க பயன் படுத்த முடியும். வீட்டில் பயன்படுத்தாத அறைகளை விருந்தினர் வந்தால் அவசரமாக சுத்தம் செய்து பயன் படுத்துவது போல.அதற்கு வேண்டியது 4..5.. தலையணைகள் மட்டும் தான்.

செயல் முறை இதுதான்

1. குப்புற வயிற்றின் மூலம் படுத்து கொண்டு வயிற்றுக்கு அடியில் அல்லது நெஞ்சுக்கு அடியில் தலையணை வைத்து கொள்ள வேண்டும் இதன் மூலம் முதுகு பக்கம் வளைந்து விரிந்து நுரையீரல் அனைத்து பாகமும் லகுவாக காற்றை உள்ளிழுக்கும். இதை செய்யும் போது கூடுதலாகமுகத்துக்கு அடியில் மற்றும் கால்களிலும் தலைனை வைத்து கொள்ளலாம்.

2. மேலே சொன்னதை அரைமணி நேரம் செய்த பின் வலது பக்கமாக முழுமையாக திரும்பி கைகளை வலது பக்கம் வைத்து அரைமணிநேரம் வைத்து படுக்க வேண்டும்.

3. பின் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் இம்முறை முதுகு பக்கம் தலையனைகளை வைத்து கொண்டு சாய்ந்து உட்கார வேண்டும்

4.பின் இடது பக்கம் திரும்பி படுக்க வேண்டும்.மேல் சொன்னதை நேரம் கிடைக்கும் போது மாற்றி மாற்றி செய்து கொண்டு இருப்பது மூலம் ஆக்சிஜன் அளவை எந்த கருவி உதவியும் இன்றி உடலில் கூட்டி கொள்ள முடியும்.சாப்பிட்ட 1 மணி நேரம்.வரை பண்ண கூடாது. கர்ப்பிணிகள் பண்ண கூடாது.