essay on advantages and disadvantages of internet
தமிழில் இணையம்
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள ஒவ்வொருவரும் இணையம் பற்றி அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை, அதுவே மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம், தகவல் தொழினுட்பம், தொலைத்தொடர்பு என்னும் இரண்டு பெரிய துறைகளின் இணைப்பினால் உருவாக்கப்பட்டதே இணையம், அது தகவல்களின் மிகப் பிரமாண்டமான தொகுப்பாகும். இணையத்தை உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் எனக் குறிப்பிட முடியும். எந்தவொரு விடயம் தொடர்பாகவும் வரலாற்று ரீதியாக தகவல்களை தருவதுடன் மிகவும் இந்திய தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள உதவும் சாதனம், அதாவது தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்களின் விளைவே இணையம். அதனுடைய சிறப்பம்சம் அது ஒரு பல்லூடகத் தொடர்பியல் சாதனமாக விளங்குவதே! அதாவது உலக நாடுகளில் உள்ள பல மொழி பேசுபவர்களையும், பலதுறை சார்ந்தவர்களையும் பல்வேறுபட்ட செய்திப் பரிமாற்றங்களையும் ஒன்றிணைப்பது. மிகப் பெரும் பொழுது போக்கு சாதனங்களை ஒன்றிணைத்தும் முப்பரிமாண இயல்பில் தகவல்களை வழங்குகிறது.
ஆரம்பத்தில் உயர் கல்வித் துறையிலும் மட்டுமே பங்களிப்பை செய்த இணையம் இன்று பல்வேறு தேவைகளுக்கும் தனது கதவுகளை அகலத்திறந்து வைத்துள்ளது. உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் நன்மை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அதாவது உலக வலயக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது. மக்கள் தமது தொழில்களையும் தேவைகளையும் இணையத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் தொலைக்கல்வி முறையில் திறந்த போதனா முறை ஒன்றை வழங்குகிறது ஒரு மொழியின் வளர்ச்சியும் இருப்பும், தகவல் தொழில்நுட்பத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் கூட இணையம் கைகொடுத்து உதவியுள்ளது எனலாம்.
இணையத்துக்கு உரிமையாளர் எவரும் இல்லை. எனில் எவரும் நேரடியாகத் தொடர்பை பெறமுடியாது. இணைய ஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிக்கொள்ள முடியும். வீடுகளிலும், பாடசாலைகளிலும், அலுவலகங்களிலும் அதனை உபயோகிப்பவர்களுக்கு பல்வேறுபட்ட அளவிலான தகவல்களை உடனுக்குடன் வழங்குகிறது. தனி ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட உபயோகத்துக்கென சிறு அளவிலான இணையங்களும் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையம் சுமார் 180 நாடுகளில் உள்ள 25 மில்லியன் கணிப்பொறிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து இருந்தது. இன்று அது இடையறாது வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.
எனவே இன்று தகவல் தொழில் நுட்பத்தில் பெருமளவுக்கு வியப்பூட்டும் ஒரு சாதனமாக இணையம் விளங்குகிறது. அறிவுத் துறைகள் தொடர்பான பேரளவு தகவல் தளங்களைத் தன்னகத்தே கொண்டது, மக்களது எண்ணங்களையும் சிந்தனைகளையும் பரவலாக எடுத்துச் செல்வதற்கான ஒரு வழி முறை, எனவே தமிழ் இணையப் பயன்பாடு வளர்ச்சி அடைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். தமிழில் இணையம் எனும் போது அது கணினியின் கட்டளை மொழியாக தமிழை பயன்படுத்துதல், தமிழில் விசைப்பலகை அமைத்தல், போன்ற முயற்சிகளைக் குறிக்கும். தமிழில் கணினி அமைக்கும் முயற்சி மலேசியாவில் தோற்றம் பெற்ற போதும் தமிழ் நாட்டில் இதன் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கை காணக்கூடியதாய் உள்ளது. எனினும் தமிழில் இணையம் அமைப்பதில் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது. அதாவது தமிழ் மொழியில் பொதுவான கலைச்சொற்களை ஆக்குவது சிரமம். இதற்காக இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் இருந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இவ் ஆய்வில் கலந்து கொண்டார். எனினும் பன்னாட்டு பல்வகை இணையங்களை ஒன்றுபடுத்துவது சிக்கல் நிறைந்த ஒன்றாக உள்ளது.
இதனால் சென்னை, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழில் இணையம் தொடர்பாக மாநாடுகள் நடத்தப்பட்டன. எனினும் தகவல் தேவையைக் குறிப்பிட்ட ஒரு மொழியில் நிறைவேற்ற முடியுமா? என்பது சிந்தனைக்கு உரியது காலத்தின் கட்டாயம் தமிழில் இணையம் வளர்ச்சியடைய வேண்டியுள்ளமை. ஏனெனில் ஊடகங்களால் தான் ஒரு மொழியின் நிலை பேத்தை தக்க வைக்கவும், வளர்ச்சியைப் பேணவும் முடியும். அவையே வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் காரணமாக அமைவன.
மொழி வழி சமூகங்கள் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து பிற்காலத்தில் திரும்பிப் பார்க்க பிந்திய கால மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உட்புற அரும் பெரும் சாதனமாக விளங்குவது இணையம் தான். இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறாயின் தமிழ் மாணவர்கள் தமிழில் தகவல்களை பரிமாறிக்கொள்ள தமிழில் இணையம் வளர்ச்சி பெறுதல் வேண்டும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கணினி தமிழில் உருவாவது அவசியம். ஆங்கிலத்தைப் போன்று தமிழையும் பயன்படுத்தக் கூடிய வகையில் உலகளாவிய ரீதியில் கணிப்பொறி முறைகளைப் பயன்படுத்த குறியீட்டு முறையை விசைப்பலகையும் தராதரப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழ் இணையத்தை பயன்படுத்துவதிலுள்ள மிகப் பெரிய சிக்கல் நீங்கிவிட்டது. இன்று நூற்றுக்கணக்கான தமிழ் வலயங்களிற்கு இலட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்.
1. தனிநபர் நிலையத் தொடர்புகள்
2. குழு நிலைத் தொடர்புகள்
3. வெகுசன ஊடகங்கள்
என மூன்று வழிகளிலும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் . ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போன்று நன்மைகள்
பெருமளவிற்கு சிக்கல்களும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முயற்சியினால் சிக்கல்களை வெற்றிகொள்ள முடியும். அவற்றை வெற்றி கொள்வதிலேயே மனித செயற்பாடு தங்கியுள்ளது. எனவே எமது விழுமியங்களைப் பேணி அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழில் இணையத்தைப் பயன்படுத்துவதிலேயே எமது வருங்கால வெற்றி தங்கியுள்ளது எனலாம்.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனின் செயற்பாடுகளை இலகு பெறச் செய்து பெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது இணையம். தமிழில் குறியீடுகளும், விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் தமிழ் கலைச்சொற்கள் மிகக் குறைவாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கணினித் தமிழ்ச்சங்கம் இணையத்தளத்தினூடாக கலைச் சொற் தொகுதிகளை அறிமுகம் செய்து “வெப்” (Web) தளங்களினூடாக வெளியிடுகின்றது. “தமிழ் நெற்” (Tamilnet) மூலம் செய்திகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது இவ்வாறு தமிழ் மொழியானது உலகம் போற்றும் மொழியை வளர்ச்சி அடைய தமிழ் இணையம் மேலும் மேலும் சேவையை வழங்கி வருகின்றது. மேலும் வழங்க வேண்டிய நிலைக்கு உயர்வடையும் என்பதில் ஐயமில்லை.

Other Exam Papers Download
01. GCE A/L General English Past Papers | In English Medium Click here to Download
02. Grade 5 scholarship exam Excellent English Click here to Download
03. Grade – 5 IQ Model Paper Click Here to Download
04. Grade 3 Maths Worksheet Click here to Download
05. First Grade English Worksheet 2021 Click here to Download